Home Featured நாடு மலேசிய தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்!

மலேசிய தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் உயர் அதிகாரிக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்!

580
0
SHARE
Ad

isis1கோலாலம்பூர் – மலேசியாவின் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவைச் சேர்ந்த தலைமை அதிகாரி ஆயோப் கானுக்கு, ஐஎஸ்ஐஎஸ் போராளி முகமட் வாண்டி மொகமட் ஜெடியிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது.

தீவிரவாதியிடமிருந்து நேரடியாகவே தொலைப்பேசி வழியாக புக்கிட் அமான் தீவிரவாதத்திற்கு எதிரான சிறப்புப் பிரிவிற்கு இந்த மிரட்டல் வந்துள்ளதாக ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் முகமட் வாண்டியின் மூத்த சகோதரரை கைது செய்ததற்காகவும், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளதற்காகவும் அயோப்புக்கு இந்த மிரட்டல் விடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அயோப்போடு, தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் உள்ளிட்ட தலைவர்களையும் ஐஎஸ் குறி வைத்துள்ளது.