Home Featured நாடு நீஸ் தாக்குதல்: காயமடைந்தவர்களில் மலேசிய மாணவரும் ஒருவர்!

நீஸ் தாக்குதல்: காயமடைந்தவர்களில் மலேசிய மாணவரும் ஒருவர்!

740
0
SHARE
Ad

nice2கோலாலம்பூர் – வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் நாட்டின் நீஸ் (Nice) நகரில் மக்கள் திரளாகத் திரண்டு பாஸ்டில் (Bastille Day) திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அந்தக் கூட்டத்தில் புகுந்த பெரிய வாகனம் ஒன்று நெரிசல் மிகுந்த மக்கள் மீது செலுத்தப்பட்டதில் இதுவரை 73 பேருக்கும் மேல் மாண்டுள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் மலேசிய மாணவரும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எஸ்மாண்ட் சுவா (வயது 22) என்ற அந்த மாணவர் நேற்று மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து செல்பேசி மூலமாக தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு தான் நலமுடன் இருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது குறித்து எஸ்மாண்டின் தந்தை கூறுகையில், “அவர் நலமுடன் உள்ளார். அவரது காலை அசைக்க முடிகின்றது. ஆனால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது” என்று பினாங்கைச் சேர்ந்த 50 வயதான சுவா திஸ் லெங் தெரிவித்துள்ளார்.