புதுடில்லி – திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை புதுடில்லிக்கு மூன்று நாள் அலுவல் வருகை மேற்கொண்டிருந்த துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததோடு, மேலும் சில அமைச்சர்களையும், பிரமுகர்களையும் சந்தித்தார்.
மலேசிய உள்துறை அமைச்சரான சாஹிட் ஹாமிடி, இந்திய உள்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கைச் சந்தித்து (மேலே படம்) இருநாடுகளுக்கும் இடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்திய சாஹிட், தெலுங்கானாவின் தொழில்துறை அமைச்சர் கே.டி.இராமராவையும் சந்தித்தார்.
தெலுங்கானா மாநிலத்துக்கான தொழில் வாய்ப்புகள் பெறும் நோக்கில் இராமராவ் அண்மையில் மலேசியாவுக்கு வருகை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடில்லியில் தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் இராமராவுடன் சாஹிட்…
புதுடில்லியில் இ-விசா (e-visa) எனப்படும் மலேசியாவுக்கான மின்னியல் குடிநுழைவு விண்ணப்பத் திட்டத்தையும் சாஹிட் தொடக்கி வைத்தார்.
இ-விசா தொடக்க நிகழ்ச்சியில் சாஹிட் மற்ற மலேசிய தூதரக அதிகாரிகளுடன்…