Home Featured தமிழ் நாடு சட்டமன்றத்திலும் – வெளியிலும் ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் மீது காவல் துறை புகார்!

சட்டமன்றத்திலும் – வெளியிலும் ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் மீது காவல் துறை புகார்!

690
0
SHARE
Ad

stalin-2015-620x330

சென்னை – தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலும், தமிழக சட்டமன்ற வளாகத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக இந்தப் புகார் செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும்போது தொடர்ந்து, இடையூறுகள் செய்ததற்காக, ஆகஸ்ட் 17ஆம் தேதி, சட்டமன்ற அவைத் தலைவர் தனபால் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலிருந்து வெளியேற மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சட்டமன்றக் காவலர்கள் குண்டுக் கட்டாக வெளியே தூக்கிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18, 19ஆம் தேதிகளில் தலைமைச் செயலகத்திலும், சட்டமன்ற வளாகத்திலும் ஸ்டாலினும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக, காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.