Home Featured நாடு நாம் வீ பினாங்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

நாம் வீ பினாங்கு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்!

619
0
SHARE
Ad

namewee-rapper

கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நாம் வீ நாளை திங்கட்கிழமை பினாங்கு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். அவரைத் தடுப்புக் காவலில் வைக்க, காவல் துறை விண்ணப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“பசித்திருக்கும் ஆவிகள் திருவிழா” (Hungry Ghost Festival) என்ற சீனப் பெருநாளை முன்னிட்டு பினாங்கின் வழிபாட்டு மையங்களில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளைக் கொண்ட நான்கு நிமிட காணொளி ஒன்றை நாம் வீ நேற்று சனிக்கிழமை இணையத்தில் யூ டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். தைவானிய இசைக் குழு ஒன்றின் காட்சிகளும் அதில் இடம் பெற்றிருந்தன.

#TamilSchoolmychoice

நாம் வீ என்ற புனைப் பெயரில் இணையத்தில் உலவும் அவரது இயற்பெயர் வீ மெங் சீ என்பதாகும்.

பினாங்கு தஞ்சோங் பூங்காவில் உள்ள ‘மிதக்கும் பள்ளிவாசல்’ என்று அழைக்கப்படும் பள்ளிவாசலும் அந்த காணொளியில் இடம் பெற்றிருந்தது. இந்த காணொளியின் மூலம் நாம் வீ இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டார் என்று கூறி பல புகார்கள் காவல் துறையில் செய்யப்பட்டன.

33 வயதான நாம் வீ, இன்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் தடுத்து வைக்கப்பட்டார்.