கோலாலம்பூர் – கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி பினாங்கில் அமைந்துள்ள ஜூரோ ஆட்டோ சிட்டி (Juru Auto city ) வளாகத்தில் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் கலை நிகழ்ச்சி, களைக் கட்டியது. சுமார் 18,000 பேர் இக்கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டி.எச்.ஆர் ராகாவின் தலைவர் சுப்ராமணியம் வீரசாமி கூறுகையில், “வேறும் வானொலி வாயிலாக மட்டுமே மக்களை மகிழ்ச்சிப்படுத்தாமல் இவ்வகையான கலை நிகழ்ச்சிகளின் வாயிலாக அறிவிப்பாளர்களை மக்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பினாங்கில் இந்தக் கலை நிகழ்ச்சியை நடத்தியுள்ளதை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. இவ்வேளையில் ஆதரவு வழங்கிய பினாங்கு மக்களுக்கு ராகாவின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர் ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, கவிமாறன், சுரேஷ், கீதா, அகிலா, யாசினி, ஜெய் ஆகியோரின் ஆடல், பாடல் எனப் பல படைப்புகள் இடம்பெற்றது.
அதுமட்டுமின்றி, கடந்தத 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற ராகாவின் ஸ்டார் யார் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகிய வேலராசன் மற்றும் டாஸ்சாமினியின் படைப்புகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
அதே வேளையில், ராகாவின் சீரியல் பேய் 11-வது திகில் நாடகத்தை ரசிகர்கள் நேரடியாகக் கண்டு களிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘சீரியல் பேய்’ எனும் தலைப்பில் மர்மம், திகில், நகைச்சுவை என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய 11 அத்தியாயங்களைக் கொண்ட இந்நாடகத்தை ராணி சுந்தரராஜூ இயக்கி இருந்தார்.
சீரியல் பேய் 11-வது அத்தியாத்தை டி.எச்.ஆர் ராகாவின் முகநூலையில் கண்டு களிக்கலாம்.
இந்தக் கலை நிகழ்ச்சியின் காணொளிகளைக் காணுவதற்கு டி.எச்.ஆர் ராகாவின் முகநூலை வலம் வருங்கள்.