Home Featured நாடு ஜோகூர் பாருவில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஜிக்கா பாதிப்பு!

ஜோகூர் பாருவில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஜிக்கா பாதிப்பு!

679
0
SHARE
Ad

zika virusபுத்ராஜெயா – ஜோகூர் பாருவைச் சேர்ந்த 27 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசியாவில் பதிவாகியுள்ள மூன்றாவது ஜிக்கா சம்பவம் இதுவாகும்.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றிலிருந்து, நான்கு மாதக் கர்ப்பிணிப் பெண்ணான அவருக்கும், அவரது சிசுவிற்கும் ஜிக்கா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், சிங்கப்பூரில் பணியாற்றும் அவரது கணவர் மூலம் அப்பெண்ணிற்கு ஜிக்கா வைரஸ் தாக்கியுள்ளதா? என்றும் தாங்கள் ஆய்வு செய்து வருவதாகவும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, அப்பெண்ணிற்கு ஜிக்கா வைரஸ் தாக்கியது பரிசோதனையில் உறுதியான பின்பு தான், அவரது கணவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.