சென்னை – அமலாக்கத் துறையினரின் விசாரணையில் சிக்கியிருக்கும் தமிழக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று சனிக்கிழமை மாலை ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன.
விசுவநாதனின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி விசாரணைகள் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமலாக்கத் துறையினரின் விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், தான் கைது செய்யப்படவில்லை என்றும் நத்தம் விசுவநாதன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கரூரின் அன்புநாதன் என்பவரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் நத்தம் விசுவநாதனுடையது என்பதை வருமானவரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாகவும், ஊடகங்கள் தெரிவித்துள்ளன.