Home Featured தமிழ் நாடு அ.தி.மு.க அலுவலகத்துக்கு ஓ.பன்னீர் செல்வம்-நத்தம் விஸ்வநாதன் திடீர் வருகை!

அ.தி.மு.க அலுவலகத்துக்கு ஓ.பன்னீர் செல்வம்-நத்தம் விஸ்வநாதன் திடீர் வருகை!

747
0
SHARE
Ad

natham+viswanathan+ADMK+Officeசென்னை – அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை நேற்று சந்தித்த நிலையில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வருகை தந்தனர்.

அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதா 2 முறை பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.

ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஐவர் அணி என்று அழைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கும் தலைமை வகித்தார். கட்சி மற்றும் ஆட்சி ரீதியாக எந்தவொரு ஆலோசனை என்றாலும், இந்த ஐவர் குழுவினரை தான் ஜெயலலிதா அழைத்து பேசுவார்.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. அது நிரூபணம் ஆகும் வகையில் கட்சியில் இருந்து அவர் ஓரம் கட்டப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கண்டறியப்பட்டு கட்சி பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசியபோது அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அதற்கு மாறாக அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கொண்ட புதிய நால்வர் அணி அப்போது கலந்து கொண்டனர். இதனால் அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் நேற்று மாலை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, தன் மீது எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு தன்னிலை விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவை திடீரென சந்தித்து பேசியிருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு இன்று ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் ஆகியார் முற்றுப்புள்ளி வைத்தனர்.

ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர்கள் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, பல்வேறு அமைப்பினர் ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி ஆகியோரை  சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

காலை 11 மணி தெராடங்கி பிற்பகல் வரை 30 அமைப்புகள் சந்தித்துள்ளது. அமைச்சர் வைத்திலிங்கம்,  வேலுமணி, தங்கமணியும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஓரங்கட்டப்பட்ட உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனுக்கு அழைப்பு இல்லை.