Home Featured வணிகம் மேக்சிஸ்-ஏர்செல் விவகாரம் 2-ஜி சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்! மாறன் சகோதரர்கள் கோரிக்கை நிராகரிப்பு!

மேக்சிஸ்-ஏர்செல் விவகாரம் 2-ஜி சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்! மாறன் சகோதரர்கள் கோரிக்கை நிராகரிப்பு!

1257
0
SHARE
Ad

marans-l

புதுடில்லி – தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மேக்சிஸ்-ஏர்செல் விவகாரம் தொடர்பான வழக்கு 2-ஜி சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்படக்கூடாது – காரணம், இதற்கும் 2-ஜி விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை என கலாநிதி மாறன் – தயாநிதி மாறன்(மாறன் சகோதரர்கள்) சமர்ப்பித்திருந்த கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

ஏர்செல்-மேக்சிஸ் பங்குப் பரிமாற்றம் நடந்த காலகட்டம், அதன் அம்சங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது 2-ஜி ஊழலுக்கும் அதற்கும் சம்பந்தமுண்டு எனவும், தொடர்ந்து சிறப்பு நீதிமன்றமே இந்த விவகாரத்தை விசாரிக்கும் என்றும் நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

2-ஜி ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய புலனாய்வுத் துறையும், அமலாக்கத் துறையும் மாறன் சகோதரர்கள் மீது வழக்குகளைத் தொடுத்திருக்கின்றன.

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மாறன் சகோதரர்கள் ஊழல் புரிந்ததாக வழக்குத் தொடுத்திருக்கும் வேளையில், அமலாக்கத் துறையோ ஏர்செல்-மேக்சிஸ் பங்குப் பரிவர்த்தனை மூலம் அவர்களுக்கு கிடைத்த 742 கோடி ரூபாய்க்கும் மேலான இலாபத் தொகை தொடர்பில் வழக்கைப் பதிவு செய்துள்ளது.

aircel-maxis-deal-logoஆனால், இந்த விவகாரங்கள் தங்களின் தனிப்பட்ட வணிக பரிவர்த்தனைகள் என்றும் எனவே 2-ஜி சிறப்பு நீதிமன்றம் இதனை விசாரிக்கக் கூடாது என்றும் மாறன் சகோதரர்கள் மனு ஒன்றை சமர்ப்பித்திருந்தனர்.

அதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் மாறன் சகோதரர்களின் வாதத்தில் சற்றும் ஆதாரமில்லை என்றும் சிறப்பு நீதிமன்றமே அவர்களின் வழக்கை விசாரிக்கும் என்றும் முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, அன்று மாறன் சகோதரர்களின் பிணை (ஜாமீன்) மனு மீதான விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அன்றே, மலேசியக் கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், மேக்சிஸ் உயர் அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீதான கைது ஆணை தொடர்பான விசாரணைகளும் நடைபெறும் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.