Home நாடு துன் மகாதீர் வழங்கிய குடியுரிமையால் தான் சபாவில் பிரச்சினை

துன் மகாதீர் வழங்கிய குடியுரிமையால் தான் சபாவில் பிரச்சினை

538
0
SHARE
Ad

3கோலாலம்பூர், மார்ச்.19-  சபாவில் விரைவாக குடியுரிமை வழங்கியதால் தான் தற்போது தீவிரவாதிகளின் ஊடுருவல் பிரச்சினை எழுந்திருப்பதாக கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கு முடிவில் SAMM தலைவரும் செகுபார்ட் என அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷாஹாரின் தெரிவித்தார்.

முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான்,  இந்த நாட்டில் சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கியது குறித்துக் கேள்வி எழுப்பும் மகாதீர் ‘நன்றியில்லாதவர்’.

“சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் துங்கு குடியுரிமை கொடுத்திருக்கா விட்டால் மகாதீர் தந்தைக்கு யார் குடியுரிமை வழங்கியிருப்பார்கள்?” என அவர் வினவினார். அவர் மகாதீருடைய இந்திய வம்சாவளித் தந்தையைத் தான் அவ்வாறு குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அடையாளக் கார்டு திட்டத்தில் தமக்குச் சம்பந்தமில்லை என மகாதீர் மறுப்பதைக் காட்டும் வீடியோவை SAMM திரையிட்ட போது கூட்டத்தினரிடையே சலசலப்பு எழுந்தது.

அந்த நிகழ்வில் சபாவைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்களும் அரசு சாரா அமைப்புக்களின் உறுப்பினர்களும் பேசினார்கள். அந்த ஊடுருவலை கூட்டரசு அரசாங்கம் கையாண்ட விதத்தை அவர்களில் பெரும்பாலோர் குறை கூறியதுடன் அடையாளக் கார்டு திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் கூட்டத்தினருக்கு விளக்கினர்.