Home உலகம் அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!

அமெரிக்க தீர்மானத்தால் இலங்கைக்கு பாதிப்பில்லை! இந்தியாவே சிங்களத்துக்கு சாதகமாக திருத்தங்கள் செய்தது!

633
0
SHARE
Ad

india-sri-lanka-flags2ஜெனிவா, மார்ச்.19- அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிங்களவர்களுக்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே 3 முறை திருத்தங்களுடன் வரைவு தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 4-வது முறையாக திருத்தம் செய்யப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் இறுதி தீர்மானம் ஆகும்.

இதையடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் இலங்கை கெஞ்சியதால் தீர்மானத்தின் வாசகங்களின் தாக்கம் குறைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதேபோல் இந்த முறையும் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தில் 4 முறை திருத்தங்கள் செய்துள்ளது. ஒவ்வொரு முறையாக இலங்கைக்கு எதிரான வாசகங்களின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டு வந்த நிலையில் அது ஏற்கப்படவில்லை. போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

குற்றம் செய்த நாடே குற்றத்தை விசாரித்தால் எப்படி இருக்கும் எனவேதான் சர்வதேச விசாரணை தேவை என கோரப்பட்டது. அது ஏற்கப்படவில்லை. இதேபோல் இலங்கைக்கு செல்லும் குழுக்கள் அந்நாட்டிடம் ஒப்புதல் பெற்ற பிறகே செல்ல வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் எல்லாம் இலங்கைக்கு சாதகமானவை. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாகவே அமெரிக்கா கொண்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஆனால் இந்தியா தரப்பில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தப்படவில்லை. இதுதான் தமிழர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும். ஆனால் இலங்கைக்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சிங்களர்களுக்கு ஆதரவாகவே இந்தியா செயல்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வரைவு தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. உப்பு சப்பில்லாத இந்த தீர்மானத்தினால் இலங்கை தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்து நிலவுகிறது.