Home இந்தியா ராஜபக்சேவை குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது!– பாஜக

ராஜபக்சேவை குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது!– பாஜக

574
0
SHARE
Ad

rajapasheசென்னை,மார்ச்.19- இலங்கை ஜனாதிபதி  ராஜபக்சேவை குற்றவாளி என்றும் அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம்  கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பும் சமஉரிமையும் வழங்கப்பப்பட வேண்டும்.

அத்துடன் தொடர்ந்து வன்முறைகள் இடம்பெற இடமளிக்க கூடாது என்பதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சரியான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

எனினும்  ராஜபக்சேவை யுத்த குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கையை பி.ஜே.பி ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.