சென்னை – சென்னையில் நடைபெற்ற அனைத்துலக “பேசு தமிழா பேசு” போட்டியில் மலேசியாவின் யூதார் பல்கலைக்கழக மாணவர் சிவராஜ் லிங்கராஜ் வெற்றி வாகை சூடினார்.
கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அப்பேச்சுப் போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மியன்மார் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
முதல்நிலை வெற்றியாளராக வாகை சூடிய சிவராஜ், 5000 ரிங்கிட் ரொக்க பரிசையும், சாம்பியன் கிண்ணத்தையும் தட்டிச் சென்றார்.
இரண்டாவது இடத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவர் சுதாகர் பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3000 ரிங்கிட்டையும், வெற்றி கோப்பையையும் வென்றார்.
மூன்றாவது இடத்தில் மலேசியாவின் கலைச்செல்வி ரத்னமும், இந்தியாவின் சரவணனும் 2000 ரிங்கிட்டையும், வெற்றிக் கோப்பையும் வென்றனர்.