Home Featured தமிழ் நாடு மோடியைச் சந்திக்கிறார் பன்னீர் செல்வம்!

மோடியைச் சந்திக்கிறார் பன்னீர் செல்வம்!

788
0
SHARE
Ad

narendra-modi-panneer-selvam-comboசென்னை – தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று திங்கட்கிழமை  புதுடில்லி சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு நடத்துகின்றார்.

அந்தச் சந்திப்பின்போது, வர்தா புயலினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக மத்திய அரசாங்கத்தின் கூடுதல் நிதி ஒதுக்கீட்டைக் கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், புதுடில்லியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலை நிர்மாணிக்கப்பட வேண்டுமென்றும் பன்னீர் செல்வம் மோடியிடம் கோரிக்கை வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழக முதல்வராக நியமிக்கப்பட்ட பன்னீர் செல்வம் நரேந்திர மோடியுடன் புதுடில்லியில் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.

ஆளுநருடன் பன்னீர் செல்வம் சந்திப்பு

இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ்வுடன் பன்னீர் செல்வம் சந்திப்பு நடத்தியுள்ளார். இன்று நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பு குறித்து அவர் ஆளுநருடன் கலந்தாலோசனை நடத்தினார் என்று கூறப்படுகின்றது.