Home Featured கலையுலகம் அனைத்துலக “பேசு தமிழா பேசு” – மலேசியாவின் சிவராஜ் வாகை சூடினார்!

அனைத்துலக “பேசு தமிழா பேசு” – மலேசியாவின் சிவராஜ் வாகை சூடினார்!

1080
0
SHARE
Ad

sivarajசென்னை – சென்னையில் நடைபெற்ற அனைத்துலக “பேசு தமிழா பேசு” போட்டியில் மலேசியாவின் யூதார் பல்கலைக்கழக மாணவர் சிவராஜ் லிங்கராஜ் வெற்றி வாகை சூடினார்.

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அப்பேச்சுப் போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மியன்மார் ஆகிய 5 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

முதல்நிலை வெற்றியாளராக வாகை சூடிய சிவராஜ், 5000 ரிங்கிட் ரொக்க பரிசையும், சாம்பியன் கிண்ணத்தையும் தட்டிச் சென்றார்.

#TamilSchoolmychoice

இரண்டாவது இடத்தில் இலங்கையைச் சேர்ந்த மாணவர் சுதாகர் பாலன் தேர்ந்தெடுக்கப்பட்டு, 3000 ரிங்கிட்டையும், வெற்றி கோப்பையையும் வென்றார்.

மூன்றாவது இடத்தில் மலேசியாவின் கலைச்செல்வி ரத்னமும், இந்தியாவின் சரவணனும் 2000 ரிங்கிட்டையும், வெற்றிக் கோப்பையும் வென்றனர்.