Home Featured தமிழ் நாடு குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்று பெயர் சூட்டிய சசிகலா!

குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்று பெயர் சூட்டிய சசிகலா!

628
0
SHARE
Ad

sasikalaசென்னை – அதிமுக தொண்டர் ஒருவரின் பெண் குழந்தைக்கு, மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் நினைவாக அவரது பெயரையே சூட்டியிருக்கிறார் சசிகலா.

தேனியைச் சேர்ந்த காயத்ரி, செந்தில் குமார் தம்பதிக்கு சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் தங்கள் குழந்தையோடு போயஸ் கார்டன் சென்று நேற்று ஞாயிற்றுக்கிழமை சசிகலாவைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

அக்குழந்தையை வாழ்த்திய சசிகலா, ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார்.

#TamilSchoolmychoice

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா, தொண்டர்களின் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவரின் வழியில் தற்போது சசிகலாவும் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைத் துவங்கியுள்ளார்.