Home Featured இந்தியா துருக்கியில் ரஷியத் தூதர் படுகொலை – இந்தியா கண்டனம்!

துருக்கியில் ரஷியத் தூதர் படுகொலை – இந்தியா கண்டனம்!

752
0
SHARE
Ad

புதுடெல்லி – துருக்கியில் நேற்று திங்கட்கிழமை ரஷியத் தூதர் அண்ட்ரி கார்லாவ், காவல்துறை அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

turkey( ரஷியத் தூதர் அண்ட்ரி கார்லாவ் (வலது) சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்)

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “துருக்கியில் ரஷியத் தூதர் படுகொலை செய்யப்பட்டுள்ளதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இச்சம்பவம் அறிந்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice