ஜகார்த்தா – இந்தோனிசியாவின் கிலி தீவில் சைக்கிள் திருடியதாக நம்பப்படும் இரு ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளின் கழுத்தில், “நான் திருடன்.. இனி திருடமாட்டேன்” என்று எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை தொங்கவிட்டு வீதிகளில் நடக்க வைத்து தண்டனை வழங்கியுள்ளனர் அப்பகுதி மக்கள்.
கடந்த 10 நாட்களுக்கு முன், கிலி திராவாங்கான் என்ற பிரபல சுற்றுலாத் தளத்தில், தங்குவிடுதி ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை (மிதிவண்டி) அந்த இரு ஆஸ்திரேலியர்களும் திருடியது அங்கு வைக்கப்பட்டிருந்த இரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது.
அதன் மூலம் அவர்கள் இருவரையும் பிடித்த கிராம மக்கள், அவர்களுக்கு தண்டனை வழங்கியதோடு, அவர்கள் இருவரையும் அதிகாரிகளின் உதவியுடன் தீவை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
கிலி தீவில் திருட்டிற்கு இது போன்ற தண்டனை வழங்குவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் திருட்டு விவகாரத்தில் சிக்கிய பல வெளிநாட்டினர் இப்படிப்பட்ட தண்டனையை பெற்றுள்ளனர்.