Home Featured நாடு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் முழு இயக்கத்திற்கு வந்தன!

நீர் சுத்திகரிப்பு ஆலைகள் முழு இயக்கத்திற்கு வந்தன!

481
0
SHARE
Ad

logo-syabasகோலாலம்பூர் – டிஎன்பி (Tenaga Nasional Berhad ) பராமரிப்புப் பணிகளும், புக்கிட் பாடோங் துணை மின்நிலையப் பணிகளும் திட்டமிட்டபடி நிறைவடைந்தன.

இது குறித்து சியாபாஸ் (Syarikat Bekalan Air Selangor Sdn Bhd) இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுங்கை சிலாங்கூர் 1, 2, 3-ம் கட்ட நீர் சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது முழு இயக்கத்திற்கு வந்துவிட்டன” என்று தெரிவித்துள்ளது.

பகுதி 1-க்கு இன்று மாலை 4 மணியிலிருந்து நீர் விநியோகம் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் லாரிகளின் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் சியாபாஸ் தெரிவித்துள்ளது.

நீர் விநியோகம் குறித்த மேல் விவரங்களை syabas.com.my  என்ற இணையதளத்திலோ அல்லது ‘Air Selangor‘ என்ற பேஸ்புக் அல்லது டுவிட்டர் பக்கத்திற்கோ சென்று அறிந்து கொள்ளலாம்.