Home Featured தமிழ் நாடு திமுக செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!

திமுக செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின்!

691
0
SHARE
Ad

Stalin-Karunanithi-namakku mame completionசென்னை – அண்ணா அறிவாலயத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி கலந்து கொள்ளவில்லை என்பதால், கட்சியின் மூத்த உறுப்பினர் அன்பழகன் ஸ்டாலினை செயல் தலைவராக முன்மொழிந்தார். அதற்கு துரைமுருகன் வழி மொழிந்தார்.

தலைவருக்கான அனைத்து அதிகாரங்களும் செயல்தலைவருக்கு இருப்பதாக அக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஸ்டாலின் கண்ணீருடன் ஏற்றுக் கொண்டார். திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தனக்கு இப்பொறுப்பு வழங்கப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், தலைவர் உடல்நலம் இன்றி இருக்கும் போது இப்பதவியைத் தான் ஏற்பது சற்று வருத்தமாக இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின், இப்பொறுப்பினை ஏற்று சிறப்பாக செயல்படுவேன் என்று உருக்கமாகத் தெரிவித்தார்.