Home Featured இந்தியா பிரவாசி தொடக்க விழாவில் மோடி – போர்ச்சுகல் பிரதமர்!

பிரவாசி தொடக்க விழாவில் மோடி – போர்ச்சுகல் பிரதமர்!

848
0
SHARE
Ad

பெங்களூரு – இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00-க்குத் (இந்திய நேரம்) தொடங்கும் பிரவாசி பாரதிய திவாஸ் 2017 தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அதிகாரபூர்வமாக மாநாட்டைத் தொடக்கி வைக்கின்றார்.

pbd-2017-welcome-postersமோடி- போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ ஆகியோரை வரவேற்கும் வகையில் பெங்களூரு சாலை ஒன்றை அலங்கரிக்கும் பதாகை

அவருடன் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ கோஸ்தாவும் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றார்.

#TamilSchoolmychoice

நேற்று இந்தியாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு, புதுடில்லி வந்தடைந்த போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ கோஸ்தா, மோடியைச் சந்தித்து இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

narendra-modi-portugal-pm-anthoniaநேற்று புதுடில்லியில் இந்தியாவுக்கு வருகை தந்திருக்கும் போர்ச்சுகல் பிரதமர் அந்தோணியோ கோஸ்தா மோடியைச் சந்தித்தபோது…

இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வந்தடையும் அந்தோணியோ, பிரவாசி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து சிறப்பிக்கின்றார்.

மலேசியாவிலிருந்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தெற்காசிய நாடுகளுக்கான கட்டமைப்புக்கான சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, இளைஞர், விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.