Home உலகம் பாகிஸ்தானில் மே 11-ம் தேதி பொதுத்தேர்தல்

பாகிஸ்தானில் மே 11-ம் தேதி பொதுத்தேர்தல்

568
0
SHARE
Ad

pakistan-elections

இஸ்லாமாபாத், மார்ச் 21- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மே 11-ம் தேதி தேர்தலை நடத்தலாம் என்று பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் முன்மொழிந்துள்ளார். இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட அதிபர் சர்தாரி, மே 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். தேர்தல் அட்டவணையை இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவிக்கும்.

பாகிஸ்தானில் தற்போது நடைபெற்ற மக்களாட்சிதான் தனது முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்துள்ளது. பாகிஸ்தான் நிறுவப்பட்ட 1947 முதல் அங்கு பல ஆண்டுகள் ராணுவ ஆட்சிதான் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.