Home Featured இந்தியா உர உற்பத்தியில் இந்தியாவை இணைக்கும் திட்டம் – மோடியுடன் சாமிவேலு பேச்சுவார்த்தை!

உர உற்பத்தியில் இந்தியாவை இணைக்கும் திட்டம் – மோடியுடன் சாமிவேலு பேச்சுவார்த்தை!

938
0
SHARE
Ad

modi11பெங்களூர் – மலேசியாவின் முன்னணி பெட்ரோல் தயாரிப்பு நிறுவனமான பெட்ரோனாசுடன் இணைந்து சபா, சரவாக்கில் யூரியா, அமோனியா தயாரிப்பு ஆலை அமைக்க மலேசிய அரசு திட்டமிட்டுள்ளது. அத்திட்டத்தில் இந்தியாவையும் இணைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பெங்களூரில் நடைபெற்ற 14-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்து கொண்ட நரேந்திர மோடியை, இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான மலேசியாவின் கட்டமைப்பு சிறப்புத் தூதர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு சந்தித்து இது குறித்துப் கலந்தாலோசித்ததார்.

பெட்ரோனாசுடன் இணைந்து உருவாக்கப்படும் இந்த யூரியா, அமோனியா தயாரிப்புத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 4 முதல் 6 மில்லியன் டன் உரங்களை உருவாக்க முடியும் என்று சாமிவேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இத்திட்டத்தில் இந்தியாவை இணைக்க இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்றும், அதனை வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளும் போது செயல்படுத்தலாம் என்றும் சாமிவேலு குறிப்பிட்டார்.

இந்நிலையில், இத்திட்டம் குறித்து கேட்ட மோடி, அது குறித்து வியந்திருப்பதோடு, அதைப் பற்றி ஆய்வு செய்து விட்ட பிறகு தெரிவிப்பதாகக் கூறியதாக சாமிவேலு தெரிவித்தார்.

செய்தி – ஃபீனிக்ஸ்தாசன்