Home Featured நாடு “எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அநீதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்” – நீதிமன்றத்தில் அன்வார் அறைகூவல்

“எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அநீதிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்” – நீதிமன்றத்தில் அன்வார் அறைகூவல்

665
0
SHARE
Ad

ANWAR IBRAHIM_INTERVIEWஜோர்ஜ் டவுன் – நேற்று திங்கட்கிழமை இங்குள்ள உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றுக்காக சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், எதிர்க்ட்சித் தலைவர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அநீதிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது அறைகூவல் விடுத்தார்.

“நான் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கை ஆதரிக்கிறேன். நாட்டிலேயே அவர் சிறந்த முதலமைச்சர். மக்கள் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும். அவர் சிறைக்குச் செல்ல அனுமதிக்காதீர்கள்” என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் வாங்கிய இல்லம் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகளை லிம் குவான் எங் எதிர்நோக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அதே போல பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியும் சிறைக்குப் போகக் கூடாது. இது போன்ற அநீதிகள் போதும். இனியும் தொடரக் கூடாது” என்றார் அன்வார்.

1எம்டிபி தொடர்பான இரகசிய அறிக்கைகளை வெளியிட்டதற்காக 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரபிசி தற்போது அந்தத் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார்.

நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் மற்றும் ரஞ்சிட் சிங் டில்லோன் என்ற வழக்கறிஞர் ஆகியோருக்கு எதிராக அன்வார் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்காக அன்வார் நேற்று காலை 9.00 மணிக்கே ஜோர்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டுவரப்பட்டார்.

பின்னர் நேற்று பிற்பகலில் இந்த வழக்கு தொடர்பான சமாதான உடன்பாடு ஒன்று சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கிடையில் காணப்பட்ட போது அன்வார் நீதிமன்ற அறைக்குள் கொண்டுவரப்பட்டபோது, பத்திரிக்கையாளர்களிடம் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.