கோலாலம்பூர் – மலேசியாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பெர்னாமாவின் 24 மணி நேர வானொலி ஒலிபரப்பின் ஒரு பகுதியாக இன்று சனிக்கிழமை ‘தமிழ் ஒலி’ என்ற தமிழ் வானொலி ஒலிபரப்பு தொடங்குகிறது.
இன்று காலை 11.00 மணிக்கு இந்த ஒலிபரப்பு தொடங்குகிறது. இதன் தொடக்க விழா கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 2-ஆம் தேதி பெர்னாமா தலைமையகத்தில் நடைபெற்றது. முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவும், தொலைத் தொடர்பு பல்ஊடக அமைச்சர் டத்தோஸ்ரீ சாலே சைட் கெருவாக்கும் இணைந்து ‘தமிழ் ஒலி’ வானொலியின் ஒலிபரப்பைத் தொடக்கி வைத்தனர்.
இந்த ஒலிபரப்பு தினமும் இரவு 11.00 மணிமுதல் அதிகாலை 1.00 மணிவரை, இரண்டு மணி நேரங்களுக்கு முதல் கட்டமாக ஒலிபரப்பாகும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ஒலிபரப்பாகும்.
‘தமிழ் ஒலி’ ஒலிபரப்பை கீழ்க்காணும் அலைவரிசைகளில் இரசிகர்கள் கேட்டு மகிழலாம்!