Home Featured நாடு தஞ்சோங் டத்து இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது!

தஞ்சோங் டத்து இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது!

742
0
SHARE
Ad

Tanjung datuலுண்டு – தஞ்சோங் டத்து இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது. லுண்டு சமுதாய மையத்தில் காலை 9 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது.

தேசிய முன்னணி சார்பில், மறைந்த முன்னாள் சரவாக் முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திமின் மனைவி புவான் ஸ்ரீ ஜமிலா அணு போட்டியிடுகின்றார்.

தற்போதைய நிலவரப்படி, தேசிய முன்னணிக்கு எதிராக போட்டியாளர்கள் யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்வது போல் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

காரணம், ஏற்கனவே சரவாக்கில் தஞ்சோங் டத்து இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என எதிர்கட்சிகள் அறிவித்து விட்டன.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 18-ம் தேதி, தஞ்சோங் டத்து இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 11-ம் தேதி, கோத்தா சமராஹானில் உள்ள சரவாக் இருதய மையத்தில், இருதயக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அதனைத் தொடர்ந்து, அவரது தொகுதியான தஞ்சோங் டத்துவில் இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சரவாக் மாநிலத் தேர்தலில், அட்னான் (வயது 72) தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் ஜாசோல்கிப்ளி நூமானை விட 5,892 வாக்குகள் பெரும்பான்மையில், மொத்தம் 6,360 வாக்குகளில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.