Home Featured தமிழ் நாடு சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் – ப.சிதம்பரம் கருத்து!

சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் – ப.சிதம்பரம் கருத்து!

885
0
SHARE
Ad

IN23_CHIDAMBARAM_118131fசென்னை – வி.கே.சசிகலா முதலமைச்சராக ஆவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்துத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

“அதிமுக ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நடந்து கொண்டு, ஜனநாயக முறையைப் பின்பற்ற வேண்டும். மக்களும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று சிதம்பரம் கூறியிருக்கிறார்.

காமராஜரும், அண்ணாவும் அமர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் நாற்காலியை பெருமையோடு திரும்பிப் பார்க்கலாம், ஆனால் அதிமுக-வும், தமிழ்நாட்டு மக்களும் தற்போது எதிர்திசையில் பயணிக்கின்றனர் என்றும் டுவிட்டரிலும் பா.சிதம்பரம் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice