புதுடில்லி – ஜெயலலிதா-சசிகலா மீதான உச்ச நீதிமன்ற வழக்கு நாளை செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு வழங்கப்படவிருக்கிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எழுப்பப்பட்டிருக்கும் சில முக்கிய சட்ட அம்சங்கள் பின்வருமாறு:
- இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் – பினாக்கி சந்திரகோஷ், அமித்வராய் – ஆகிய இருவரும் தனித் தனியாக தங்களின் தீர்ப்பை வழங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, ஆகிய நால்வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் தீர்ப்புதான் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படவிருக்கிறது.
- ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், நாளை இந்த வழக்கிலிருந்து அவரது பெயர் நீக்கப்படும்.
- இரண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் தனித் தனியாக தீர்ப்பு வழங்குவார்கள் என நீதிமன்றப் பட்டியல் தெரிவித்துள்ளதால், இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புகளும் வெவ்வேறு விதமாக இருக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- அவ்வாறு இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பின், வழக்கு மீண்டும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மறு மேல் முறையீட்டு விசாரணைக்கு அனுப்பப்படும் என்றும் அத்தகைய விசாரணை மீண்டும் நடைபெற்று முடிய பல மாதங்கள் ஆகலாம் என்றும் சட்ட நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
- இரண்டு நீதிபதிகளும் தனித்தனி தீர்ப்புகள் வழங்குவது உறுதியாகியிருப்பதால் மீண்டும் பரபரப்பு கூடியிருக்கின்றது.
-செல்லியல் தொகுப்பு