Home Featured நாடு ஜோங் நம் கொலை: விமான நிலையத்தில் நடந்த காட்சிகள் இணையத்தில் கசிந்தன!

ஜோங் நம் கொலை: விமான நிலையத்தில் நடந்த காட்சிகள் இணையத்தில் கசிந்தன!

579
0
SHARE
Ad

Kim jong namகோலாலம்பூர் – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங் நம், கடந்த வாரம் திங்கட்கிழமை மலேசிய விமான நிலையத்தில் இரண்டு பெண்களால் விஷம் தெளித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொலை செய்ததாக நம்பப்படும் இரண்டு பெண்களையும், மேலும் ஒரு நபரையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கொலை நடந்த போது விமான நிலையத்தில் இருந்த இரகசிய கேமராக்களில் பதிவான காட்சிகள் தற்போது இணையத்தில் கசிந்திருக்கின்றன.

அதில் ஜோங் நம்மின் பின்னால் வரும் இரு பெண்களில் ஒருவர் கையில் வைத்திருக்கும் துணியால், ஜோங் நம்மின் முகத்தில் மூடி எடுக்கிறார். சில நொடிகள் நடக்கும் இச்சம்பவத்திற்குப் பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிடுகிறார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னரும், நிதானமான நிலையிலேயே இருக்கும் ஜோங் நம், அங்கிருந்து நடந்து சென்று வரவேற்பறையில் இருப்பவர்களிடம் புகார் அளிக்கிறார்.

இரு காவலர்கள் அவரை அழைத்துக் கொண்டு விமான நிலையத்தில் இருக்கும் மருத்துவ மையத்திற்குச் செல்கின்றனர். அதோடு அந்தக் காணொளி முடிகின்றது.

அதன் பின்னர் தான் ஜோங் நம் இறந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.

அக்காணொளியை இங்கே காணலாம்:-

https://www.youtube.com/watch?v=5zbY8lgVank