Home நாடு கிம் ஜோங் நம்: வியட்னாமிய பெண்மணியை விடுவிக்கக் கோரி அந்நாடு கோரிக்கை!

கிம் ஜோங் நம்: வியட்னாமிய பெண்மணியை விடுவிக்கக் கோரி அந்நாடு கோரிக்கை!

1064
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரை கொலை செய்தது தொடர்பில் கைதான வியட்னாம் நாட்டினைச் சேர்ந்த பெண்மணியை விடுதலைச் செய்யுமாறு நேற்று செவ்வாய்க்கிழமை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டது.

முன்னதாக, கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நமை கொலை செய்த வழக்கில், தடுத்து வைக்கப்பட்ட இந்தோனிசிய பெண்மணி கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வியட்னாமிய பெண்மணியான டோவன் தி ஹுவோங் மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஜோங் நம் முகத்தில் விஎக்ஸ் பொடியை தூவியதாக இந்த இரண்டு இளம் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டனர்.

#TamilSchoolmychoice

கடந்த திங்களன்று இந்தோனேசியா பெண்மணியான சித்தி அய்ஷா, இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.  அதனைத் தொடர்ந்து, வியட்னாம்வெளியுறவுஅமைச்சர் பாம் பின் மின், நேற்று மலேசிய வெளியுறவு அமைச்சிடம் ஹுவோங்கை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.