Home நாடு கிம் ஜோங் நம் கொலை வழக்கு : குற்றவாளிகள் எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டனர்

கிம் ஜோங் நம் கொலை வழக்கு : குற்றவாளிகள் எதிர்வாதம் செய்ய அழைக்கப்பட்டனர்

958
0
SHARE
Ad

ஷா ஆலாம் – இன்று நடைபெற்ற கிம் ஜோங் நம் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரு பெண்மணிகளும் தற்காப்பு வாதம் புரிய அழைக்கப்பட்டனர். 26 வயதான இந்தோனிசியப் பெண் சித்தி அயிஷா மற்றும் 29 வயதான வியட்னாமியப் பெண் டோன் தி ஹூவோங் ஆகிய இருவரும் கிம் ஜோங் நம்மைக் கொலை செய்தார்கள் என்பதை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்துள்ளதால், அவர்கள் இருவரும் தற்காப்பு வாதம் செய்ய வேண்டும் என ஷா ஆலாம் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மி அரிபின் உத்தரவிட்டார்.

வட கொரியாவின் 45 வயதுடைய கிம் ஜோங் நம் அல்லது கிம் சோல் என்ற பெயர் கொண்டவரைக் கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்படுள்ள இருவரும் இன்று காலை பலத்த காவலுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின், ஒன்றுவிட்ட சகோதரரான 45 வயதான கிம் ஜோங் நம்மை விஷ அமிலம் கொண்ட துணியின் மூலம் கொலை செய்ததற்காக அந்த இருவரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் -2 இன் புறப்பாடு வளாகத்தில் காலை 9.00 மணியளவில் அவர்கள் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.