Home நாடு கிம் ஜோங் நம் – கொலை வழக்கில் முக்கியத் தீர்ப்பு

கிம் ஜோங் நம் – கொலை வழக்கில் முக்கியத் தீர்ப்பு

1025
0
SHARE
Ad

ஷா ஆலாம் – வட கொரியாவின் கிம் ஜோங் நம் அல்லது கிம் சோல் என்ற பெயர் கொண்டவரைக் கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்படுள்ள இந்தோனிசியப் பெண் சித்தி அயிஷா மற்றும் வியட்னாமியப் பெண் டோன் தி ஹூவோங் ஆகிய இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்களா அல்லது தங்களைத் தற்காத்துக் கொள்ள அழைக்கப்பட வேண்டுமா என்ற முக்கிய முடிவை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவிக்கும்.

குற்றஞ்சாட்டப்பட்ட இந்த இருவரும் இன்று காலை பலத்த காவலுடன் நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டனர் என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின், ஒன்றுவிட்ட சகோதரரான 45 வயதான கிம் ஜோங் நாம்மை விஷவாயு செலுத்தி கொலை செய்ததற்காக அந்த இருவரும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் -2 இன் புறப்பாடு வளாகத்தில் காலை 9.00 மணியளவில் அவர்கள் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.