Home நாடு வாக்காளர் பட்டியலில் மத தகவல் அகற்றப்பட்டால், மலாய்க்காரர்களின் செல்வாக்கு பறிபோகும்!

வாக்காளர் பட்டியலில் மத தகவல் அகற்றப்பட்டால், மலாய்க்காரர்களின் செல்வாக்கு பறிபோகும்!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வாக்காளர்களின் மதம் குறித்த தகவலை வாக்காளர் பதிவுப் பட்டியலில் இருந்து அகற்றுவதன் மூலம் மலேசியர்களை ஒன்றுபட வைக்க முடியாது என மலாயா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் அவாங் அஸ்மான் பாவி குறிப்பிட்டுள்ளார்.

இம்மாதிரியான நடவடிக்கைகளால், நம்பிக்கைக் கூட்டணி அரசு மலாய்க்காரர்களின் சிறப்புரிமை மற்றும் அரசியலில் அவர்களின் செல்வாக்கை பறிக்க மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாக கருதப்படலாம் என அவர் எச்சரித்தார்.

மேலும் கூறிய அவர், இம்மாதிரியான யோசனைகள் நிராகரிக்கப்படும் என்றும், நம்பிக்கைக் கூட்டணி மலாய்க்காரர்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை எனும் கருத்துகள் எழும் எனவும் அவர் தெரிவித்தார்.