Home நாடு அம்னோ-பாஸ்: தீவிர மதம், இனக் கருத்துகள் மக்களை எல்லா நேரங்களிலும் கவராது!- கைரி

அம்னோ-பாஸ்: தீவிர மதம், இனக் கருத்துகள் மக்களை எல்லா நேரங்களிலும் கவராது!- கைரி

1218
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சிகளின் அரசியல் ஒத்துழைப்பு தேசிய முன்னணியின் பொதுக் கொள்கைக்குள் உடன்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் அம்னோ கட்சி இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுதின் கூறினார்.

மலேசியா, பல்லின மக்களைக் கொண்ட நாடு என்பதனை அவர்கள் ஒதுபோதும் மறந்து விடக்கூடாது என அவர் குறிப்பிட்டார். மதம், இனம் எனும் கூறுகளை மட்டும் கொள்கையாகக் கொண்டு இந்நாட்டில் செயல்படுவது சரியானதாக இருக்காது. அது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நட்டமாகவே முடியும்.

தேசிய முன்னணியின் நிருவாகக் குழு இந்த ஒத்துழைப்பை முக்கியமானதாகக் கருதி, தேசிய முன்னணியின் மையக் கொள்கைக்கு அது ஒத்துபோவதாக இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். வெறும் இனம், மதம் எனக் காரணம் காட்டி எல்லா நேரங்களிலும் நாம் மக்களைக் கவர முடியாது, அதனைக் கடந்த ஒரு புரிந்துணர்வு தேசிய முன்னணி கூட்டணிக்குள் இணைந்து செயல்பட இருக்கும் அம்னோ- பாஸ் கட்சிகளுக்கு இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.