Home நாடு கைரி ஜமாலுடின் இன்னொரு கட்சியில் சேருவாரா? புதிய கட்சி தொடங்குவாரா?

கைரி ஜமாலுடின் இன்னொரு கட்சியில் சேருவாரா? புதிய கட்சி தொடங்குவாரா?

508
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், அடுத்து எந்தக் கட்சியில் சேருவார்? என்னும் ஆரூடங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.

மீண்டும் அம்னோவில் தொடர்வதற்கு கைரி தனது உறுப்பிய நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடும். தனது மேல்முறையீடு குறித்த முடிவு தெரிந்த பின்னரே அவர் தன் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்னவென்று முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் அவருக்கு பெர்சாத்து கட்சியின் வழி தேசியக் கூட்டணியில் இணைவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை அவர் ஏற்பாரா? அல்லது பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணிக் கட்சிகளான பிகேஆர் அல்லது அமானா கட்சியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

கைரி தனிக் கட்சி தொடங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

இதற்கிடையில் ஜோகூர் காற்பந்து குழுவின் தலைமைச் செயல் அதிகாரியாக கைரி நியமிக்கப்படலாம் என்றும் ஜோகூர் இளவரசர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அம்னோவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து தான் கொஞ்சமும் மனம் தளரவில்லை என்றும் மனமுடைந்து போகவில்லை என்றும் கைரி கூறியிருக்கிறார்.