Home Featured நாடு ஜோங் நம் கொலை: சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டனர்!

ஜோங் நம் கொலை: சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் இருந்து தப்பிவிட்டனர்!

587
0
SHARE
Ad

jong-nam-afp2கோலாலம்பூர் – கிம் ஜோங் நம் கொலையில் திட்டம் அமைத்தவர்களில் நான்கு முக்கிய நபர்கள், மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறை இன்று திங்கட்கிழமை அறிவித்தது.

வடகொரியாவைச் சேர்ந்த ரி ஜி ஹியோன் (வயது 33), ஹோங் சோ ஹாக் (வயது 34), ஓ ஜோங் கில் (வயது 55), ரி ஜா நம் (வயது 57) ஆகிய நான்கு பேரும், கிம் ஜோங் நம் கொலையான அன்றே மலேசியாவிலிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

எனினும், அவர்கள் நால்வரும் எந்த நாட்டிற்குச் சென்றார்கள் என்பதை காவல்துறை தெரிவிக்க மறுத்தது.

#TamilSchoolmychoice

மேலும், ரி ஜி யு என்ற ஜேம்ஸ் என்ற வடகொரிய நபரோடு, மேலும் இருவருவரையும் காவல்துறை தேடி வருவதாக தேசிய காவல்படத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷித் இப்ராகிம் தெரிவித்தார்.