Home Featured நாடு ஜோகூர் விபத்து: கார் ஓட்டுநர் விடுவிக்கப்பட்டார்!

ஜோகூர் விபத்து: கார் ஓட்டுநர் விடுவிக்கப்பட்டார்!

730
0
SHARE
Ad

9 childrenஜோகூர் பாரு – கடந்த சனிக்கிழமை அதிகாலை, சாலையோரம் குழுவாக சைக்கிளோட்டிச் சென்ற சிறுவர்கள் மீது, கார் மோதியதில் 8 சிறார்கள் மரணமடைந்தனர்.

இந்நிலையில், விபத்திற்குள்ளான அக்காரை ஓட்டிய 20 வயதான பெண், வேகமாகச் செல்லவில்லை, மது அருந்தியிருக்கவில்லை, கார் ஓட்டும் போது செல்பேசி பயன்படுத்தவில்லை ஆகியவை, காவல்துறை விசாரணையில் உறுதியானதையடுத்து, அப்பெண்ணை காவல்துறையினர் விடுவித்தனர்.

இது குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை உள்துறை அமைச்சர் டத்தோ நூர் ஜஸ்லான் மொகமட், அப்பெண் விடுவிக்கப்பட்ட தகவலை அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள்? என்பதை பெற்றோர் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இரவு நேரங்களில் சிறார்கள் நகரில் சுற்றிக் கொண்டிருப்பதற்கு எதிராக ஜோகூர் மாநில அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் நூர் ஜஸ்லான் தெரிவித்தார்.

எனவே, பொதுமக்கள் யாரும் இந்தச் சம்பவம் குறித்து வதந்திகளைப் பரப்பி, இனவாதப் பிரச்சினைகளை உருவாக்கிவிட வேண்டாம் என்றும் நூர் ஜஸ்லான் கேட்டுக் கொண்டார்.