Home நாடு பிரதமரை பொதுவில் விமர்சனம் செய்ய வேண்டாம் – நூர் ஜாஸ்லானுக்கு கைரி அறிவுரை

பிரதமரை பொதுவில் விமர்சனம் செய்ய வேண்டாம் – நூர் ஜாஸ்லானுக்கு கைரி அறிவுரை

573
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் ஒரு முன்னோடிக் கட்சியாக, ஒற்றுமையான தேசிய  முன்னணியைக் காட்ட வேண்டும் என்பதால், இஸ்மாயிலுக்கு எதிரான விமர்சனங்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என பூலாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் ஜாஸ்லானை கைரி ஜமாலுடின் கேட்டுக் கொண்டார்.

“நூர் ஜஸ்லான் இஸ்மாயிலிடமோ அல்லது அம்னோ தலைவரிடமோ ஏதாவது சொல்ல வேண்டுமானால், வேறு பல வழிகள் உள்ளன. கட்சியின் உட்கட்டமைப்பின் வழி அவ்வாறு செய்வதே சிறந்த வழி. கருத்து வேறுபாடுகள் இருந்தால், கூட்டங்களின் போது பேசுங்கள். அல்லது தனிப்பட்ட முறையில் விவாதிக்கவும். ஊடகங்களில் ஆக்கப்பூர்வமற்ற கருத்துக்களால் கட்சியை பலவீனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை,” என்று முன்னாள் அம்னோ இளைஞர் தலைவரும் சுகாதார அமைச்சருமான கைரி ஜமாலுடின் கூறினார்.

நேற்று வெளியிட்ட அறிக்கையில், சுரைடா கமாருடினின் அமைச்சரவைப் பதவி குறித்து முடிவெடுப்பதில் தாமதம் செய்வது இஸ்மாயிலின் பலவீனமான நிலையைக் குறிக்கிறது என நூர் ஜஸ்லான் கூறியிருந்தார்.