ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் தமிழ்நாட்டிற்கான வருகையை மேற்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று புதன்கிழமை (ஜூன் 22) வந்தடைந்தார்.
இந்த பயணத்தின் போது தமிழ்நாட்டுப் பிரமுகர்கள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களையும் சரவணன் சந்திக்கவுள்ளார்.
திருச்சி வந்தடைந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிய சரவணன், தனது இலக்கியப் பயணம் மலேசியாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தார்.
கோவிட் காலகட்டத்தில் 5.3 விழுக்காடாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது 4 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்றும் சரவணன் குறிப்பிட்டார்.