Home இந்தியா சரவணனுக்கு தமிழ் நாட்டில் பாராட்டு விழா

சரவணனுக்கு தமிழ் நாட்டில் பாராட்டு விழா

741
0
SHARE
Ad

இராமநாதபுரம் : தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்திருக்கும் மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு ராமநாதபுரத்தில் மலேசியத் தொழிலதிபர்கள் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (ஜூன் 23-ஆம் தேதி) இந்திய நேரப்படி மாலை 6.00 மணியளவில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலேசியத் தொழிலதிபர்கள் இணைந்து இந்தப் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். ராமநாதபுரம் கிங்ஸ் பேலஸ் எனும் தங்கும் விடுதியில் நடைபெறும் இந்த பாராட்டு நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா, முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர். விழாவிற்கு டத்தோ ஜமாருல் கான் தலைமை வகிக்கிறார்.

பாராட்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் வருகை தரும் சரவணன் அங்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் தரிசனம் செய்கிறார். அதன் பின்னர், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார்.