சென்னை : இன்று காலையில் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களும் பொதுக் குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.
எனினும் இந்த பொதுக் குழுக் கூட்டம் சட்டவிரோதமானது என்று கூறி ஓ.பன்னீர் செல்வம் கூட்டத்திலிருந்து தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அந்தக் கூட்டத்தில் எடப்பாடியார் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.
இன்றைய பொதுக் குழுக் கூட்டத்தில் தமிழ் மகன் உசேன் கட்சியின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓ.பன்னீர் செல்வம் மண்டபத்திலிருந்து வெளியேறும் சமயத்தில் தண்ணீர் பாட்டில் ஒன்று அவரை நோக்கி வீசப்பட்டதாலும் பரபரப்பு ஏற்பட்டது.