ஜோகூர் பாரு: ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட், பாஸ் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முவாபாக்காட் நேஷனல் பக்கமா அல்லது தேசிய கூட்டணியுடன் பெர்சாத்து பக்கமா என்பதை அது தெரிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கட்சி அங்கேயும் இங்கேயும் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதாக விவரித்த அவர், எந்தப் பக்கம் என்று முடிவெடுப்பதில் தைரியமாகவும் நேர்மையாகவும் இருக்குமாறு பாஸ் கட்சியைக் கேட்டுக் கொண்டார்.
“முவாபாக்காட் நேஷனலில் எங்களுடன் ஒத்துழைக்க அவர்கள் இன்னும் ஆர்வமாக இருக்கிறார்களா அல்லது அவர்கள் தேசிய கூட்டணியை ஆதரிக்க விரும்புகிறார்களா என்பது குறித்த அவர்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை நாங்கள் அறிய விரும்புகிறோம். அம்னோ அதன் நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக உள்ளது, ” என்று அவர் இன்று சினார் ஹரியானிடம் கூறினார்.
“கட்சியின் அரசியல் பிழைப்புக்காக எப்போதும் இயங்க வேண்டாம். கண்ணியமாக இருங்கள், நேர்மையான தேர்வு செய்யுங்கள்,” என்று அவர் கூறினார்.