இதனை அடுத்து, அச்செய்திதளம் தனது முகப்புப் பக்கத்தைக் கறுப்பு நிறத்தில் மாற்றி உள்ளது. எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இந்தத் தீர்ப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக மலேசியாகினி இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
மேலும், அதன் செய்திகளில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளை புகைப்படங்களாக மாற்றம் கண்டுள்ளன.
தனது முகப்புப் பக்கத்தில் வாசகர்களின் நிதி ஆதரவு தங்களுக்குத் தேவை என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள மலேசியாகினி, அபராதத்தைச் செலுத்தத் தங்களுக்கு உதவும் நோக்கில் பொதுமக்கள் தங்களுக்கு நன்கொடை வழங்குமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக் கொண்டது.
இத்தகைய மிகப் பெரிய தொகை கொண்ட அபராதத்தை விதித்து அதன் மூலம் தங்களை முடக்கிப் போட்டு, நிறுவனத்தை மூட வைக்கும் முயற்சியாக இதைப் பார்ப்பதாக மலேசியாகினி ஆசிரியர் ஸ்டீவன் கான் தெரிவித்திருக்கிறார்.
அதே வேளையில் கனடா, பிரிட்டன் தூதரகங்களும் மலேசியாகினிக்கு ஆதரவாகத் தங்களின் அறிக்கைகளை விடுத்துள்ளன.