Home One Line P1 ஹாடி அவாங் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்

ஹாடி அவாங் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்

454
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று தேசிய இருதய சிகிச்சை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் அவர் திங்கட்கிழமை இரவு 7.50 மணிக்கு புத்ராஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை வட்டாரங்களின்படி, ஹாடியை பரிசோதித்த மருத்துவர் பின்னர் அவர் பலவீனமாக இருப்பதை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், கொவிட் -19 பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஹாடி பின்னர் மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக ஐஜேஎன்-க்கு அனுப்பப்பட்டார்.

“புத்ராஜெயா மருத்துவமனை அவசரப் பிரிவு மற்றும் ஐ.ஜே.என் மருத்துவமனைகள் , மற்றும் எனது உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன், ” என்று ஹாடி முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.