கோலாலம்பூர்: மலேசியாகினி செய்தித்தளத்திற்கு ஆதரவாக கனடா மற்றும் பிரிட்டன் தூதரகம் வருத்தம் தெரிவித்துள்ளன.
இது குறித்து அவை டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளன.
“இன்றைய தீர்ப்பு குறித்து நாங்கள் வருந்துகிறோம். அனைவரின் பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வுக்கு ஊடக சுதந்திரம் அடிப்படையானது. விவாதங்களை சுதந்திரமாக முன்வைக்க மக்களை அனுமதிக்க வேண்டும்,” என்று அவை ஒரு கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
முன்னதாக, மலேசியாகினி செய்தித்தளத்தில் வெளியான ஒரு செய்தியின் பின்னூட்டத்தில் நீதிதுறைக்கு எதிராக அவதூறு கருத்துகளை அனுமதித்தக் காரணத்திற்காக, அந்நிறுவனத்திற்கு 500,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அதனை அடுத்து அச்செய்தித் தளத்திற்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகளிடமிருந்து ஆதரவு பெருகி வருகிறது.