இந்திய தேசிய லீக் கட்சியின் வடசென்னை மாவட்டம் சார்பில் அப்புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கமல்ஹாசனின் அக்கருத்து மக்களிடத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக அக்கட்சி தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், அவரின் இக்கருத்தினைப் பயன்படுத்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சில சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு கமல்ஹாசன் தான் பொறுப்பு என்றும் அக்கட்சி தெரிவித்திருக்கிறது.
கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் நிலவி வந்த சம்பவங்களை கவனித்து வந்த கமல், அவ்வப்போது தனது கருத்துகளைத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.