Home Featured நாடு கிம் ஜோங் நம்மின் மகன் கோலாலம்பூர் வருகிறார்!

கிம் ஜோங் நம்மின் மகன் கோலாலம்பூர் வருகிறார்!

673
0
SHARE
Ad

KimHanSolகோலாலம்பூர் – கிம் ஜோங் நம்மின் மகன் ஹான் சோல் இன்று திங்கட்கிழமை இரவு மலேசியா வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இன்று இரவு 7.40 மணியளவில், ஏர் ஆசியா விமானத்தில் அவர் கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைவார் என்று கூறப்படுகின்றது.

குடும்பத்தினரின் மரபணு மாதிரி கிடைக்கும் வரை கிம் ஜோங் நம்மின் சடலத்தைக் கொடுக்க மாட்டோம் என மலேசியா கூறிவிட்டதால், மரபணு மாதிரியைக் கொடுத்து உறுதி செய்த பிறகு, தனது தந்தை கிம் ஜோங்கின் சடலத்தை ஹான் சோல் வடகொரியாவிற்கு வாங்கிச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice