சியோல் – ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் கியுன் ஹை, இன்று வெள்ளிக்கிழமை தனது நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றத்தால், பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.
தனது தோழியுடன் சேர்ந்து அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் தென்கொரிய நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக குற்ற விசாரணைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்கொரிய வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்றாக, நீதிமன்றத்தால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் கருதப்படுகின்றது. இதனையடுத்து, இன்னும் 60 நாட்களுக்குள் தென்கொரியாவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.