Home Featured இந்தியா மணிப்பூரில் பாஜக ஆட்சி!

மணிப்பூரில் பாஜக ஆட்சி!

801
0
SHARE
Ad

manipur-imphal-புதுடில்லி – காங்கிரசை விட குறைவான எண்ணிக்கையில் சட்டமன்றத் தொகுதிகளை வென்றிருந்தாலும், கோவா போலவே, மணிப்பூரிலும் மற்ற சிறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது பாஜக.

மொத்தமுள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், பாஜக 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. மற்ற சிறிய மாநிலக் கட்சிகள் 7 தொகுதிகளையும் என்பிஎப் எனப்படும் நாகா மக்கள் முன்னணி கட்சி 4 தொகுதிகளையும் வென்றிருக்கின்றன.

ஆட்சி அமைக்க 31 தொகுதிகள் தேவை என்னும் நிலையில் பாஜகவுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்க முன்வந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பாஜக முதல்வராக நோங்தொம்பம் பிரன் சிங்காஸ் தேர்வாகியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

நாளை செவ்வாய்க்கிழமை மணிப்பூர் ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமையை பிரன் சிங்காஸ் கோருவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரசில் இயங்கி வந்த 56 வயதான, பிரன் சிங்காஸ், கடந்த ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.